ஜிஎஸ்டி – ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி வாகனங்கள் ₹4.5L – ₹30.4ள் குறைந்தன!


மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் செய்து, ஆடம்பர வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விகிதம் மட்டுமே நிலைநிறுத்தியது. இதன் பலனாக ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியா தனது ரேஞ்ச் ரோவர், டிபெண்டர், டிஸ்கவரி போன்ற வாகனங்களின் விலையை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை குறைத்துள்ளது.

ஜாக்வார் லேண்ட் ரோவர் இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் ரஞ்ஜன் அம்பா, “இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கும் தொழில் துறைக்கும் நல்ல வளர்ச்சி வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

அரசு சீர்திருத்தத்தால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி பலன்
அதிகபட்சம் ரூ.30.4 லட்சம் வரை வாகனங்கள் விலை குறைந்துள்ளது. இதன் மூலம் வாகனங்களை விற்பனை அதிகரிக்கவும் மக்கள் எளிதாக வாங்கவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.