தொழில் கட்டுரைகள்
“10 ஏக்கர்… 5 தொழில்கள்…” – வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி
திருவாரூர் அருகே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் பெறும் பட்டதாரி விவசாயி சாதனை. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து குறைந்த வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், மாற்று சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பின்பற்றி ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி, பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன். திருவாரூர்…
அமெரிக்கா 126% வரி விதித்ததால் இந்திய Solar ஏற்றுமதிக்கு பெரிய சவால் — சந்தை மற்றும் தொழில்துறை தாக்கம்
சமீபத்தில் அமெரிக்க Department of Commerce இந்தியாவிலிருந்து வரும் சூரிய சக்தி செல்கள் மற்றும் மோட்யூல்கள் (solar cells & modules) மீது preliminary countervailing duty (CVD) என்றும் அழைக்கப்படும் பதில் வரியை 125.87% (சுமார் 126%) என அறிவித்துள்ளது — இது இந்திய solar உற்பத்தியாளர்களின் இரண்டாம் பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை வேகமாகக் குறைக்கும் அபாயத்தைக் உருவாக்கியுள்ளது. இந்த வரி அறிவித்ததால், Waaree Energies, Premier Energies மற்றும் Vikram Solar போன்ற…
மாற்றத்தின் கட்டமைப்பு: உங்கள் வாழ்க்கையை உருமாற்ற 6 திறவுகோல்கள்
சிறப்புக் கட்டுரை | தலைமைத்துவம் மற்றும் சுய முன்னேற்றம் இன்றைய வேகமான உலகில், பல நேரங்களில் நாம் ஒரே இடத்தில் தேங்கிவிட்டது போன்ற ஒரு உணர்வு நமக்குள் தோன்றும். அது நம் தொழிலாகவோ, தன்னம்பிக்கையாகவோ அல்லது வருமானமாகவோ இருக்கலாம். வெற்றிக் கோபுரத்தின் உச்சியில் இருப்பவர்களைப் பார்க்கும்போது, “அவர்கள் இந்தப் பயணத்தை எப்படித் தொடங்கினார்கள்?” என்ற வியப்பு நமக்குள் எழுவது இயல்பு. உருமாற்றம் (Transformation) என்பது ஏதோ ஒரு மாயாஜாலம் அல்லது திடீரென ஒரு நாளில் நடக்கும் அதிசயம்…
கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!
நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து…
“தரணி போற்றும் தமிழர்கள்” வரிசையில் ராம்ராஜ் காட்டன் திரு. கே.ஆர் நாகராஜன்!
திரு. கே.ஆர். நாகராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தை 1983 ஆம் ஆண்டு, திருப்பூரில் ஒரு சிறிய அலுவலகமாக, ராம்ராஜ் காதி டிரேடர்ஸ் என்ற பெயரில், பாரம்பரிய இந்திய உடையான வேட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கினார். திருப்பூர் பகுதியில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பான நிலையற்ற சூழ்நிலை கே.ஆர். நாகராஜனை அவர்கள் மீது கவலை கொள்ள வைத்தது, இதன் விளைவாக, வேட்டிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை, நெசவாளர்களுக்கு வழங்குவது என முடிவு செய்தார்….




