இப்போது மின் உற்பத்தி என்றால் கட்டிடங்களின் கூரை மட்டுமல்ல, சுவர், தரை, வேலி என எந்த மேற்பரப்பும் புதிய வணிக வாய்ப்பாக மாறும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்பமான HeliaSol எனப்படும் சூரிய ஆற்றல் தொழில்நுட்பம்.
என்ன இது HeliaSol?
HeliaSol என்பது ஒரு சுழல்படல சூரிய இயக்கி (Organic Photovoltaic – OPV) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மிகவும் வளைவான, ஒளியுணரும் சூரியப் படலமாகும். இது வெறும் கூரைகளுக்கு மட்டும் அல்லாமல், சுவர், மெட்டல், கண்ணாடி, அனைத்து மேற்பரப்புகள் எனப் பலவிதமான இடங்களில் பொருத்தக்கூடியது.
இதன் பிரதான சிறப்பம்சம் – பின்புற ஒட்டும் (adhesive) பயன்பாட்டில் இருப்பது, இதனால் வணிக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கூடுதல் பொருட்கள் அல்லது நுட்பமான நிறுவல் கருவிகள் இன்றி நேரடியாக பொருத்தலாம்.
இதனை நிறுவுதல் எளிது. இது தற்காலத்தில் குறிப்பிடக்கூடிய தொழில்நுட்ப சாதனை ஆகும்.
“HeliaSol”, HeliaTek GmbH எனும் ஜெர்மனிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் 2020-ல் ஜெர்மன் இனோவேஷன் விருதும், 2021-ல் Edison Award விருதும் பெற்றுள்ளது. இவை இரண்டும் உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிறுத்தும் முக்கிய விருதுகளாகும்.
HeliaSol என்பது உலகத்தில் முதல்முறையாக வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய OPV (அங்கிகார பெற்ற சுழல்படல சூரிய தொழில்நுட்பம்) ஆகும். இது வணிகரீதியாக பயன்படுத்துவதற்கும், தரமான மின்சார உற்பத்திக்கும் வழிவகுப்பதாக பலதரப்பட்ட சோதனைத் திட்டங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
HeliaSol நுட்பத்தை பயன்படுத்திய சில முக்கியமான திட்டங்களில் முதலாவதாக, ஜெர்மனியில் ஒரு சூரிய ஆற்றல் சார்ந்த கார்பார்க் (Solar Car Park) தளத்தை நிறுவியுள்ளது.
இரண்டாவதாக சுவிட்சர்லாந்தில் உள்ள வணிகக் கட்டிடத்தின் வெளிப்புறத்தை முழுவதாக சூரிய சுவராக (Solar-Powered Facade) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.
இவை போன்ற பைலட் முயற்சிகள் மூலம் HeliaSol தொழில்நுட்பம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
ஹெலிச்சொல் தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகளாக,
1. மிகவும் வளைவான (Ultra-flexible) – வேறு எந்த சாதாரண சோலார் பேனல்களாலும் கையாள முடியாத மேற்பரப்புகளிலும் பொருத்தக்கூடியது.
2. எளிதாக ஒட்டக்கூடியது (Self-Adhesive) – எளிமையான நிறுவல்.
3. இலகுரகமானது (Lightweight) – கட்டிடத்தின் அழுத்தத்தை அதிகரிக்காது.
4. பசுமை சக்தி – Zero Emission மின்சாரத்தை வழங்கும்.
5. ஏற்கனவே பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது.
இதன் காரணமாக HeliaSol போன்ற தொழில்நுட்பங்கள், இந்தியாவில் குறிப்பாக மாநகர வளர்ச்சி, வணிக வளாகங்கள், சுங்க நிலையங்கள், மின் சார்ஜிங் நிலையங்கள், நகராட்சி கட்டிடங்கள் போன்ற இடங்களில் மிகுந்த பயனளிக்கக்கூடியவை.
இதனை தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாயின், மின் ஆற்றல் செலவினத்தை குறிப்பிடும் வகையில் குறைத்து, மின் உற்பத்தியை எதிர்பார்க்காத வகையில் மிகைப்படுத்தலாம்.
HeliaSol ஒரு சாதாரண சோலார் பேனல் அல்ல – இது ஒரு தொழில்நுட்ப மாற்றம்! அனைத்து மேற்பரப்புகளிலும் நிறுவுதலின் எளிமை, செயல்திறன் ஆகியவற்றால், இது எதிர்காலத்தில் சூரிய ஆற்றலுக்கான புதிய புரட்சி என தொழில்நுட்ப வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
மாறுபட்ட மேற்பரப்புகளிலும் சூரிய மின்சார உற்பத்தி மாடல் “HeliaSol”
