20 ஆண்டு பழைய வாகனங்களுக்கு RC புதுப்பிப்பு கட்டணம் உயர்வு – வாகன உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களுக்கான பதிவு (RC) புதுப்பிப்பு கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு வகை வாகனங்களுக்கு (Private Cars) பதிப்பு கட்டணம் ₹5,000–இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இருசக்கர வாகனங்களுக்கு ₹1,000–இருந்து ₹2,000; மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1,500–இருந்து ₹5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு, பெரும் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கும் காற்று மாசு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக புகை வெளியீடு கொண்ட பழைய வாகனங்களை சுலபமாக அனுமதிக்காமல் தடுக்கும் வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இது  புதிய, குறைந்த மாசு வெளியீடு உள்ள வாகனங்களைக் வாங்க ஊக்கமளிக்கும் முடிவாக இருக்கும் என்று அரசு நம்புகிறது.

குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேலுள்ள வாகனங்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அவைகளின் கட்டணம் முன்புபோலவே நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின் திட்டம், வணிகச் சந்தைகளில் புதிய வாகனம், கிரீன் வாகன ஊக்குவிப்பு திட்டங்கள் போன்ற புதிய சராசரி வணிக வாய்ப்புகளை உருவாக்கும்.