இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கொண்டு அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை இது.
இந்த வரி ஸ்டீல், அலுமினியம் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், வேளாண்மை சார்ந்த சில பொருட்கள் மீதும் இந்த வரி அமலாகிறது. இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் அபாயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல இந்த வரி காரணமாக இந்திய MSME நிறுவனங்கள், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் செயல்படும் ஏற்றுமதி தொழில்கள் நஷ்டம் அடையக்கூடும். ரூபாய் மதிப்பும் எதிர்மறையான தாக்கத்தை சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த தீர்மானத்தை இந்திய அரசு கண்டித்து, இருநாட்டு உறவை பாதிக்கக்கூடியது என கூறியுள்ளது. வர்த்தக மற்றும் வெளிநாட்டு அமைச்சகங்கள் இணைந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது சர்வதேச வர்த்தகத்துக்கு ஒரு சவாலாக இந்திய ஏற்றுமதியாளர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும். வர்த்தக போர் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ள நிலையில், இந்தியா தனது ஏற்றுமதி வழிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டுமென்று வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இது சர்வதேச வர்த்தகத்துக்கு ஒரு சவாலாக இந்திய ஏற்றுமதியாளர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும். வர்த்தக போர் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ள நிலையில், இந்தியா தனது ஏற்றுமதி வழிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டுமென்று வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.