ஜியோ – அலியன்ஸ் : ஒப்பந்தம் கையெழுத்து

Jio Financial Services மற்றும் ஜெர்மனியை சேர்ந்த Allianz கம்பெனி இணைந்து இந்தியாவில் புதிய மீள்காப்பீடு (reinsurance) நிறுவனத்தை அமைக்க உள்ளன. இந்தத் திட்டம் இரு நிறுவனங்களும் 50:50 பங்குதாரராக இருக்கும் கூட்டு வணிக சேவை முயற்சியாகும். இரு நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு துறையின் வளர்ச்சியை முன்னேற்றி, life insurance மற்றும் general insurance நிறுவனங்களுக்கு பின்னணியில் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவில் 2047க்குள் “Insurance for All” என்ற குறிக்கோளை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய முயற்சி பார்க்கப்படுகிறது. Jio-வின் தொழில்நுட்ப ஆதாரமும், Allianz-இன் உலகளாவிய காப்பீட்டு அனுபவமும் ஒன்றிணைவதால், விரைவான, நம்பகமான மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்ற காப்பீட்டு சேவைகள் வழங்கும் புதிய வாய்ப்பு உருவாகும். இந்த கூட்டணி இந்தியாவில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படும் மற்றும் முழுமையாக இந்தியாவிலேயே இயங்கும்.

Allianz கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வருகிறது. முன்னர் Bajaj Finserv உடன் ஒப்பந்தம் வைத்திருந்த Allianz, அந்த பங்குகளை விற்ற பிறகு இப்போது Jio-வுடன் புதிய கட்டத்தை தொடங்குகிறது. regulatory approvals கிடைத்தவுடன் இந்த புதிய நிறுவனம் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைமுயற்சி, இந்தியாவில் மீகாப்பீட்டு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது புதிய வேலைவாய்ப்புகள், வாடிக்கையாளருக்கான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். Jio Financial மற்றும் Allianz கூட்டணியால், இந்தியாவின் காப்பீட்டு துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது.