தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள் மட்டுமல்லாமல், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கும் பெரிய சவாலாக இருக்கிறது.
வினோத் கோஸ்லா கூறியதுபோல், செயற்கை நுண்ணறிவு, நாளடைவில் பல்வேறு துறைகளில் மனிதர்களின் பங்கை குறைய செய்யும். குறிப்பாக டேட்டா எண்டரி, நிர்வாக வேலைகள், தானியங்கி பணி செயல்பாடுகள், கஸ்டமர் சப்போர்ட், தரவு பகுப்பாய்வு, நிறுவன பிரச்சாரம், வழிகாட்டுனர்கள் போன்ற பணிகள் முதலில் பாதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே GPT போன்ற மெஷின் லெர்னிங் மொழிகள், பல தொழில்களுக்கான மனித தேவை குறைந்துவிடும் வகையில் சூழ்நிலையை உருவாக்கி விட்டன. இதே வேகத்தில் வளர்ந்தால், நாம் சந்திக்கும் தொழில்வாய்ப்பு சூழல் இன்று இருப்பதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இந்த மாற்றத்தில் இருந்து பாதுகாப்பு பெற மனிதர்களுக்கு தேவைப்படுவது – திறனை மேம்படுத்துதல் (Upskilling) மற்றும் மீள் பயிற்சி (Reskilling). கற்றல் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு புரிந்துணர்வுகள் இல்லாமல் இருக்கும் மனித ஆற்றல் நிச்சயமாக எதிர்காலத்திற்கு உகந்தது கிடையாது.
நம்முடைய உணர்வுகள், கற்பனை, ஒத்துழைப்பு, ஆழமான சிந்தனை போன்றவற்றுடன் தொடர்புடைய துறைகளில் மட்டுமே AI உடனான போட்டியில் நாம் வெற்றி பெற முடியும். எனவே, மனிதர்களுக்கே உரித்தான பணிகளுக்கு மாறும் திட்டமிடல் அவசியம்.
ஒரு தொழில்முறை மாற்றத்தின் முன்னோட்டமாக, நிறுவனங்களும் தொழில் செயல்முறைகளில் AI-ஐ எப்படி சீராகச் சேர்க்கலாம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
வினோத் கோஸ்லாவின் இந்த எச்சரிக்கைய, ஒரு பயமுறுத்தும் செய்தியோ அல்ல. அது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பு. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை என்ற அர்த்தம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், ஆனால் அதற்குத் தேவையான திறன்கள் மாறிவிடும். இந்த மாற்றத்திற்கு தயாராகி, தொழில்நுட்பத்துடன் இணைந்து பயணிக்க முடிந்தால், AI ஆக்கிரமிப்பு நம்மை உயர்த்தும் கருவியாக இருக்கும்.