Apple நிறுவனத்தின் CEO டிம் குக், சமீபத்தில் அறிவித்த தகவலின்படி, 2007ல் அறிமுகமான iPhone இன்று வரை 3 பில்லியன் யூனிட்கள் வரை உலகம் முழுவதும் விற்பனையானது. இது, எந்தவொரு மொபைல் நிறுவனமும் இதுவரை எட்டாத சாதனை.
முக்கிய அம்சங்கள்:
2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் iPhone விற்பனை 13% அதிகரித்து, $44.6 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. மொத்த நிறுவன வருமானம் $94 பில்லியன் வரை உயர்ந்துள்ளது.
Apple வரலாற்றில், முதல் பில்லியன் iPhones விற்பனைக்கு 9 ஆண்டுகள் எடுத்தது; இரண்டாவது பில்லியனுக்கு 5 ஆண்டுகள், மூன்றாவது பில்லியனுக்கு 4 ஆண்டுகள் தான். iPhone என்பது சாதாரண மொபைல் இல்லை, அது ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறது. அதிக பாதுகாப்பு அம்சங்களுடையதாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்கால சவால்கள்:
1. Siri மற்றும் AI-இல், Apple பின்னடைவில் இருக்கிறது என்ற விமர்சனங்கள்.
2. AR சாதனமான Vision Pro குறைந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
3. CEO Tim Cook கூறியபடி, “இன்னொரு 10 ஆண்டுகளில் iPhone தேவையில்லாததாக மாறக்கூடும்” என்ற கருத்து இவையெல்லாம் ஆப்பிள் நிறுவனத்திற்கு காத்திருக்கும் எதிர்கால சவால்களாக கருதப்படுகிறது.
Apple–ன் 18 வருட பயணத்தில், 3 பில்லியன் iPhones விற்பனையானது தொழில்நுட்ப வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. எப்போதும் போல எதிர்காலத்தை நோக்கி புதுமை மிக்க சாதனங்களை உருவாக்குவதே Apple–ன் அடுத்த இலக்காக இருப்பதாக நிறுவனத்தின் CEO Tim Cook கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் 3 பில்லியன் ஐபோன்கள் விற்பனை! Apple-ன் மெகா சாதனை.
