தமிழ்நாடு – புதிய தொழில் வளர்ச்சி வியூகம் | Statewide Business டெவெலப்ன்ட்!

தமிழ்நாடு – இந்தியாவின் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் என்ற பெருமையுடன், மாநிலம் முழுவதும் சமமான தொழில் வளர்ச்சி என்ற புதிய வியூகத்தை நோக்கி நகர்கிறது.

மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை சில முக்கிய நகரங்களில் மட்டும் மையப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் முதலீடுகளை கொண்டு செல்லும் பகிர்ந்தளிப்பு வளர்ச்சி மாதிரியை செயல்படுத்தி வருகிறது.

தென் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் வின்ஃபாஸ்ட் மின் வாகன ஆலைகள், டாடா மோட்டார்ஸ் திட்டங்கள், சிறிய டைடெல் பூங்காக்கள், சிப்ப்காட் தொழிற்பகுதிகள் போன்ற அடிப்படை வசதி மேம்பாடுகள் மூலம் வளர்ச்சி வேகமெடுத்து வருகிறது.

தூத்துக்குடி முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 30–100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 46,450 வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (MSME)-இல் மட்டும் ரூ. 1,261 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் வளர்ச்சி பரவியுள்ளது. இந்த ஒன்றிணைந்த வளர்ச்சி தமிழ்நாட்டை முன்னணி முதலீட்டு இலக்கிற்கான மாநிலமாக மாற்றியுள்ளது யுள்ளது.