இந்திய ரயில்வே, பசுமைப் பயண நோக்கில் முதன்முறையாக ஹைட்ரஜன் இயந்திர ரயிலை உருவாக்கியுள்ளது. சென்னையின் இன்டிக்ரல் கோச் ஃபேக்டரியில் (ICF Chennai) இறுதி சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், இந்த ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் பாதையில் இயக்கப்பட உள்ளது.
₹136 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்வே முயற்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த ரயில் 1,200 ஹார்ஸ்பவர் சக்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் சுமார் 356 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியது. ஒரே நாளில் 2,600க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை அளிக்கும் திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் 110 கி.மீ./மணி வரை செல்லும்.
“Hydrogen for Heritage” என்ற திட்டத்தின் கீழ், பாரம்பரிய மற்றும் மலைப்பாங்கான பாதைகளில் மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கேற்ற, பசுமை ஆற்றல் சார்ந்த, பாதுகாப்பான ரயில்வே சேவையை உருவாக்கும் நோக்கில் முக்கியமான படியாக கருதப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளை வலுப்படுத்துவதோடு, பசுமை ரயில்வே வளர்ச்சிக்கும், eco-friendly transportation துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது.