அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!

இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும்.

இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது.

விண்ணப்பம் TRACES போர்டல் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவையான ஆவணங்களில் – விற்பனை ஒப்பந்தம், வாங்கிய ரசீது விவரங்கள், PAN, முதலீட்டு வருமானக் கணக்குகள் ஆகியவை அடங்கும். வரித்துறை அதிகாரி ஆய்வு செய்தபின், உரிய சான்றிதழ் வழங்குவார்.

இந்நடவடிக்கை NRI களுக்கு மிகுந்த நன்மை தருகிறது. அதிக TDS பிடித்தம் செய்யப்பட்டால் அதை திரும்பப் பெற மாதங்கள் ஆகும். ஆனால் Lower TDS Certificate பெற்றால், பணப்புழக்கம் பாதிக்காமல் பாதுகாக்கலாம். அதனால் சொத்து விற்பனைக்கு முன் இதைச் செய்வது மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.