டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும்.

இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம் செயல்படுகிறது. ஓபன் நெட்வொர்க் கட்டமைப்புடன், அஞ்சல் துறை உலக தரத்தில் உள்ள பொதுத் தரவு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் கர்நாடகாவில் பைலட் திட்டமாக தொடங்கிய இந்த அமைப்பு, தற்போது முழு நாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள், மடல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

4.6 லட்சம் ஊழியர்கள் பயிற்சி பெற்று, ஒரே நாளில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் மற்றும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட விநியோகங்கள் இந்த திட்டத்தின் திறனையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன. இது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகியவற்றை இணைக்கும் முன்னேற்றமான டிஜிட்டல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.