தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது. இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது.
என்ன பயன்கள் கிடைக்கும்?
1. வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள், IT மையங்கள், கல்வி-அறிவியல் மையங்கள் வரும் வாய்ப்பு அளித்துள்ளது; வேலைக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழ்நிலை மாறி ஓசூரில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
2. மாநகர்ப்புற மேம்பாடு : போக்குவரத்து வசதி, சாலை வசதி, உள் கட்டமைப்பு வசதிகள் போன்றவை மேம்படும்; ஓசூர் நகர்ப்புறம் ஒரு அறிவுசார் நகரமாக மாறும்.
3. சமூக மற்றும் வாழ்க்கை தரம் உயரும்: சுற்றுச் சூழல், தூய்மையாக்கல், கழிவு நீர் பராமரிப்பு போன்றவை சிறப்பாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. முதலீட்டாளர்களை ஈர்த்தல்: உலக தரத்திலான உள்கட்டமைப்பும், திட்டமிடலும் கொண்ட இடமாக இருப்பதால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய வாய்ப்பு.
ஆனால், நிலங்களை கையகப்படுத்துதல், பாதுகாப்பு அனுமதிகள், சட்ட திட்டங்களை பின்பற்றல் போன்றவற்றில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு. பைபாஸ் சாலை மற்றும் சுற்றுப்பாதைகள் மேம்பாடு செய்யும்போது நிலங்களில் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.