வரும் நவம்பர் 2025 துவக்க விழா
பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தரநிலையை உலகளவில் உயர்த்தும் நோக்கில் உருவாகியுள்ள IBTC (International Board of Trainers & Coaches), 21 தேர்ந்த பயிற்சியாளர்களுடன் அறக்கட்டளையாக தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு, உலகளாவிய பயிற்சி நிறுவன அங்கீகாரம், பாதுகாப்புக்கான TradeMark அங்கீகாரம், மேலும் தரத்திற்கான ISO 9001 அங்கீகாரம் ஆகிய உயர்ந்த தரச் சான்றுகளுடன் நவம்பர் 2025 -இல் துவங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் 2025-ல் நடைபெறவுள்ள துவக்க விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் பல துறைகளிலிருந்து சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாட்டு சிறப்புக் கூட்டம், 5 அக்டோபர் 2025 (ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கோவையில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களும், புதிய பயிற்சியாளர்களும் பங்கேற்று, துவக்க விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
IBTC – பயிற்சியாளர்களின் தரத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் புதிய சமூக அமைப்பு. அவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகமாக NVMA (Namathu Vanikam Media & Association) அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு.. +919489168989