இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழும நிறுவங்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் ரிசர்ச்ச் நிறுவனம் பங்கு மோசடி, செயற்கையான பங்குகள் விலையேற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்துவந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை பெரிதும் பாதித்தது. தற்போது, இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India)இந்த குற்றச்சட்டங்களைப் பற்றி விசாரணை நடத்தி, அதானி குழுமத்திற்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் “தவறானவை” என்று தெரிவித்து அதானிக்கு ஒரு கிரீன் சிக்னல் அளித்துள்ளது.
என்ன நடந்தது?
ஹிண்டன்பர்க் அறிக்கை: 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனமானது அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை செயற்கையாக அதிகரித்துள்ளன; சில கணக்கு முறைகள் மோசடியாக காட்டப்பட்டுள்ளன, எனவே முதலீட்டாளர்களை தவறான தகவல்களால் அதானி குழுமம் வழிநடத்தியிருக்கலாம் என குற்றம் சாட்டியது.
அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை s முற்றிலும் மறுத்தது; இதை தொடர்ந்து 2013-ஆம் நிதியாண்டு முதல் 2021-ஆம் நிதியாண்டு வரை இடையிலான காலப்பகுதியில் ஹிண்டன்பர்க் வெளியிட்டக்குற்றச்சாட்டுகளை SEBI ஆராய்ந்தது. இதன்படி, அதானி குழும நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, கணக்கில் முறைகேடு, பங்குகளை செயற்கையாக உயர்த்துதல் அல்லது முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது.
இம்முடிவு அதானி குழுமத்திற்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தாலும், சந்தையின் நிலைமைகள், பங்குகள் விலை மாறுபாடு ஆகியவை இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குழும நிறுவனங்கள் தொடர்ந்து வெளிப்படையான நிதி அறிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என முதலீட்டாளர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.