APPLE நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சபி கான் நியமனம். 30 ஆண்டுகளாக APPLE நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
சபிஹ் கான் யார்?
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் பிறந்தார் (Moradabad). சிறுவயதில் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் Tufts பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரட்டைப் பட்டம் பெற்றவர். பின்னர் Rensselaer Polytechnic Institute-ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.
ஆப்பிளில் பயணம்
1995ல் ஆப்பிளில் பணியாற்றத் தொடங்கினார் (முதலில் procurement துறையில்). 2019ல் ஆப்பிளின் Senior VP – Operations ஆக பதவி உயர்வு பெற்றார்.
உலகளாவிய சப்ளை செயின், உற்பத்தி நெட்வொர்க், லாஜிஸ்டிக்ஸ், சப்ளையர் பொறுப்புணர்வு திட்டங்களை கவனித்து வந்தார்.
ஆப்பிளின் கார்பன் footprint-ஐ 60% குறைக்கும், சஸ்டைனபிள் உற்பத்தி, மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் உற்பத்தி விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
COO – வாக பதவிக்கு உயர்வு
2025 ஜூலை இறுதிக்குள், Chief Operating Officer (COO) ஆக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார்.
தற்போதைய COO ஜெஃப் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் பதவியை சபிஹ் கான் ஏற்கிறார்.
இது நீண்ட காலத்துக்குத் திட்டமிடப்பட்ட மாற்றம் என ஆப்பிள் கூறுகிறது.
தற்போது உலகளாவிய சப்ளை செயின் மாற்றங்கள், இந்தியாவிலான உற்பத்தி விரிவாக்கம், அமெரிக்கா–சீனா வர்த்தக எதிர்ப்புகள் போன்ற சூழ்நிலைகளில் ஆப்பிள் நடவடிக்கைகளை சபிஹ் கான் வழிநடத்த இருக்கிறார்.
டிம் குக்கின் பாராட்டு:
ஆப்பிள் CEO டிம் குக் அவரை “திறமைமிக்க நிபுணர்” என்றும், “ஆப்பிளின் சப்ளை செயின் சாஸ்திரத்தின் மூல வடிவமைப்பாளர்” என்றும் பாராட்டினார். “அவர் ஒரு வலிமையான தலைவர், ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியுடன் செயல்படுபவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அவரது சுயநினைவு, தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றின் சரியான கலவை தான் இந்த பதவிக்குத் தகுதி” எனவும் வலியுறுத்தினார்.
APPLE COO-ஆக இந்தியர்!
