ஓசூரில் “Ather Energy” ஐந்து லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்து சாதனை!

இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் விளங்கும் Ather Energy, தனது ஓசூர் உற்பத்தி நிலையத்தில் 5,00,000-வது மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்வப்னில் ஜெயின் இதை குறித்து,

“5 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்தல் என்பது எங்கள் குழுவின் கடின உழைப்புக்கும் தர நம்பிக்கைக்கும் அடையாளம். இது Ather-இன் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை,”
என்று தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் அறிமுகமான குடும்பப் பயன்பாட்டுக்கான ‘Rizta’ மாடல், மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்று, Ather உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.

Ather தற்போது ஓசூரில் இரண்டு உற்பத்தி நிலையங்களை இயக்கி வருகிறது —

ஒன்று ஸ்கூட்டர் அசெம்பிளிக்காகவும்
மற்றொன்று பேட்டரி உற்பத்திக்காகவும்.

மேலும், நிறுவனம் ராஷ்டிரா மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டு உற்பத்தி திறன் 14.2 லட்சம் ஸ்கூட்டர்களாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரிலிருந்து தொடங்கிய Ather Energy, இன்று இந்திய மின்சார வாகன சந்தையில் நவீன தொழில்நுட்பம், தரநிலைகள், மற்றும் புதுமைக்கு முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.