சட்டோஷியின் வாலெட்டுகள் உட்பட பல வாலேட்கள் முடக்கப்படலாம்? பிட்காயின் வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தீர்மானம் முன்வைக்கப்பட்டது!
பிட்காயின் நெட்வொர்க்கை எதிர்கால குவாண்டம் கணினி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், பிட்காயின் டெவலப்பர்களால் ஒரு புதிய மற்றும் பரபரப்பான பரிந்துரை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். இதில், பழைய பிட்ட்காயின் வாலெட்டுகளை (அதில் சதோஷி நகமோட்டோவின் வாலெட்டுகளும் அடங்கும்) முடக்கும் யோசனைகள் இடம்பெற்றுள்ளது.
இந்த திட்டத்தை பிட்காயின் டெவலப்பர் ஜேம்சன் லாப்ப் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, 2027ல் குவாண்டம் கணினிகள் பிட்காயின் நெட்வொர்க்கின் தற்போதைய பாதுகாப்பை உடைக்கும் திறனை பெறும் அபாயம் இருப்பதாக பல ஆய்வாளர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டி எச்சரிக்கின்றனர். அதற்குப் முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவே இந்த மூன்று நிலை முன்னச்சரிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மூன்று பாதுகாப்பு முன்னேச்சரிக்கை பரிந்துரைகள்:
1. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பழைய விலாசங்களுக்கு பிட்காயின் அனுப்புவதை தடை செய்யும் திட்டம்.
2. அதற்குப் பிறகும் இரண்டு ஆண்டுகளில், மேம்படுத்தப்படாத வாலெட்டுகளிலுள்ள நிதிகளை முடக்கும் திட்டம்
3. விருப்பத்தேர்வாக, ‘zero-knowledge proof’ மூலமாக அந்த frozen நிதிகளை மீட்டெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்
இதன் முக்கியத்துவம், சதோஷியின் வாலெட்டுகள் உட்பட சுமார் 25% பிட்காயின் கணினிக் கணக்கீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சட்டோஷி மற்றும் தொடக்கக்கால மைனர் களின் 1.1 மில்லியன் பிட்காயின் இந்த பரிந்துரையின் பாதிப்பில் உள்ளதாக கருதப்படுகிறது.
“ஒரு வெற்றிகரமான குவாண்டம் தாக்குதல், பிட்காயின் மற்றும் அதன் பொருளாதார சூழலையே மொத்தமாக குழப்பக்கூடிய அளவுக்கு பாதிக்கக்கூடும்” என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இது தற்போது வரை ஒரு ‘டிராஃப்ட் பரிந்துரை’ மட்டுமே. ஆனால் இது பிட்ட்காயின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கக்கூடியது என கருதப்படுகிறது.
பிட்காயினை உருவாக்கிய சட்டோஷிக்கு இந்த நிலைமையா?
