இனி புதிய சொந்தப் பயன்பாட்டு வாகனப் பதிவுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை.

டிசம்பர் முதல் ஆர்.டி.ஓ அலுவலங்களில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சலுகையை மோட்டார் வாகனத் துறை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏறத்தாழ 8,000 வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தமிழக மோட்டார் வாகனத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களையும் ஆர்.டி.ஓ அலுவலங்கங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் வழக்கம் இதுவரையில் நடைமுறையில் இருந்தது.தமிழகத்தில் 150க்கும் குறைவான ஆர்,டி,ஓ அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும்…

Read More

மாருதி வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதியின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை: கடந்த் அக்டோபர் மாதத்தில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனை 7 சதவிகிதம் உயர்ந்து, 2,20,894 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது 2,06,434 யூனிட்களாக இருந்தது.வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,80,675 யூனிட்களாகவும், பயணிகள் வாகன விற்பனை 10.48%அதிகரித்து 1,76,318 யூனிட்களாக உள்ளது. மேலும் இவ்வாகனங்களின் ஏற்றுமதி 31,304 யூனிட்கள் ஆகும்.மேலும் டொயோட்டா கிர்லோஸ்கரில்…

Read More