
நிதி மற்றும் பொருளாதாரம்

உலகளாவிய தேவை & அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிரொலி – வெள்ளி விலை உயர்வு!
இந்திய MCX-இல் வெள்ளி விலை சாதனை உயரத்தை எட்டியது. கிலோ ஒன்றுக்கு ₹1,26,730 வரை சென்றது. இதுவரை இல்லாத உச்சம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பது குறித்த எதிர்பார்ப்பு விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV), எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் துறைகள் வெள்ளி தேவையை வேகமாக அதிகரிக்கின்றன. குறைந்த டாலர் மதிப்பு மற்றும் வெள்ளி பற்றாக்குறை சந்தையில் விலையை மேலும் தூண்டுகின்றன. வெள்ளியின்…

GST குறைப்பு: கட்டுமானப் பொருட்கள் மலிவாகும்!
இந்திய அரசு சமீபத்தில் GST 2.0 சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், கிரானைட், பளிங்கு, செங்கல் போன்ற பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல கட்டுமானப் பொருட்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீடு கட்டும் செலவில் ஒரு முக்கிய குறைப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Affordable housing பிரிவில் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. குறிப்பாக, வீடு கட்டும் திட்டங்களில்…

தாயுமானவர் திட்டம் – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தோறும் ரேஷன்!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முதல்வரின் தாயுமானவர் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடு தோறும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டம் சமூக நலத்திட்டங்களில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. பயனாளர்கள் யார்? 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20.42 லட்சம் முதியோர், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தம் 21.7 லட்சம் குடும்பங்கள் இந்த சேவையால் நேரடியாக பயனடைகின்றன. சேவை நடைமுறை: மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில்…

RBI புதிய ATM விதிகள் – இலவச வரம்பை கடந்தால் கூடுதல் கட்டணம்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ள புதிய ATM விதிகள் படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். மெட்ரோ நகரங்களில் குறைந்தது 3 இலவச பரிவர்த்தனைகள், மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படுகின்றன. இவை financial transactions (பணம் எடுப்பது) மற்றும் non-financial transactions (இருப்பு பார்வை, PIN மாற்றம் போன்றவை) இரண்டையும் உள்ளடக்கும். இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அதிகபட்சம்…

கோவை தொழில்துறை சங்கங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை!
கோவையில் உள்ள தொழில்துறைகள் மற்றும் வணிக அமைப்புகள், தங்களின் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக TEXPROCIL முன்னாள் தலைவர் ரவி சாம் தலைமையில் நடைபெற்ற இந்த முயற்சி, தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சியை பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில்துறை மையமாக விளங்கும் கோவை, எஞ்சினியரிங், துணிநூல், உற்பத்தி, மோட்டார், பம்ப் உற்பத்தி போன்ற துறைகளில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது. இந்த துறைகள் மாநில பொருளாதாரத்திற்கும், இந்தியாவின் மொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க…

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!
இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும். இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது. விண்ணப்பம் TRACES…

சுகாதார காப்பீட்டில் பிரீமியம் கட்டுப்பாடு: IRDAI புதிய உத்தரவு!
சுகாதார காப்பீட்டுப் பிரீமியத்தில் ஏற்படும் அதிகப்படியான உயர்வுகள் பொதுமக்களிடையே நம் வாழ்வாதாரத்தில் பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, சில ஆண்டுகளில், சுகாதாரச் செலவின் வேகமான வளர்ச்சி, குடும்பங்களின் செலவுத்திட்டத்தை சீர்குலைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்த சூழலில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆண்டுதோறும் உடனடியிலேயே பிரீமியத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை நடத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஓர் முக்கியமான உத்தரவுப்படி, வயது 60-க்கு மேற்பட்ட முதியவர்கள் காப்பீட்டுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கு 10%-ஐ…

பி எஃப் தகவல் – இப்போது ஒரு அழைப்பில்!
இந்தியாவில் தனியார் ஊழியர்களுக்கான ஓய்வுநிதித் திட்டம் EPF (ஊழியர் எதிர்கால நிதி) மூலம், ஊழியரும் நிறுவனமும் மாதந்தோறும் பங்களிப்பு செய்கின்றனர். இதற்கு வருடாந்திர வட்டி சேர்ந்து, ஓய்வு காலத்தில் பெரிய நிதி ஆதாரமாக மாறுகிறது. எனவே, உங்கள் PF தொகையும் வட்டி நிலையும் அடிக்கடி சரிபார்ப்பது முக்கியம். EPFO வழங்கும் வசதி:உங்கள் UAN-இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425-க்கு ஒரு மிஸ்ட்-கால் கொடுத்தாலே போதும். சில நிமிடங்களில், PF தொகை மற்றும் சமீபத்திய பங்களிப்பு விவரங்கள்…

இந்திய பொருளாதாரம்: காலாண்டில் 6.8%–7% வளர்ச்சி பெறலாம்!
இந்திய பொருளாதாரம், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY26, ஏப்ரல்–ஜூன்) மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 6.5% கணிப்பை மீறி 6.8% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI-யின் nowcast மாதிரி படி, சராசரி வளர்ச்சி 6.9% என்றும், GVA (Gross Value Added) வளர்ச்சி 6.5% என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக வணிகச் செலவு அதிகரிப்பு…

செப். 2025 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
• செப்டம்பர் மாதம் எல்பிஜி (சமையல் எரிவாயு) சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாளில் மாற்றப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதம் ஆகியவை இதை சார்ந்த முக்கிய பின்புலமாக இருக்கின்றன. பொதுமக்கள், குறிப்பாக மாதாந்தம் சிலிண்டர் வாங்குவோர், இந்த மாற்றத்தினை கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். • தங்க நகைகளுக்கு தரத்திற்கான “ஹால்மார்க்” கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல, வெள்ளிக்கும் “ஹால்மார்க்” தரப்பதிவை கொண்டுவர…

செமிகண்டக்டர் மிஷன் – மீண்டும் மத்திய அரசு ₹4,600 கோடி நிதி!
இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மொத்தம் ₹76,000 கோடி மதிப்புள்ள நிதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக ₹65,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ₹62,900 கோடி வரை நிதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால், மொத்த நிதியில் 97% பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய திட்டங்களுக்கு மிகக் குறைவான இடமே மீதமுள்ளது. இந்த விவரத்தை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்னன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒதுக்கப்பட்ட நிதியில்…

GST 2.0 – வருகிறதா இரண்டு கட்ட வரி அமைப்பு?
இந்தியாவின் GST வரிவிகித அமைப்பில் பெரும் மாற்றம் வரவிருக்கிறது. இரண்டு கட்ட வரி அமைப்பிற்கான (two-slab structure) பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய 5%, 12%, 18% மற்றும் 28% எனும் நான்கு படிகள் சுருக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு கட்ட வரிகளாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘Sin goods’ என அழைக்கப்படும் பொருட்களுக்கு 40% தனித்த வரி விகிதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. • பொதுமக்களுக்கு தேவையான…

உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்க பிரதமர் மோடி அழைப்பு!
இந்தியாவின் பொருளாதார வலிமையை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களுக்கு இடமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நம் நாட்டில் விவசாயிகள் உழைக்கிறார்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்கின்றன, அத்தகைய உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்று மோடி குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டு பொருட்களை…

தீபாவளியை முன்னிட்டு, ஜிஎஸ்டி குறைப்பு!
இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் மற்றும் தொழில் வட்டாரங்கள் நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த GST வரி விகிதக் குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு சில பொருட்களுக்கு GST விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், சந்தை விற்பனைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இது…

ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதல் – இந்தியா 3 ஆண்டில் ₹1.5 லட்சம் கோடி சேமிப்பு!
2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி பெரும் கட்டண சலுகைகளைப் பெற்றுள்ளது. சர்வதேச சந்தை விலை ₹5,871 ஆக இருப்பினும், ரஷ்யா ₹5,232 மட்டுமே விலையில் வழங்கியதன் மூலம் ₹639 பிரீமியம் ஒவ்வொரு பீப்பாயுக்கும் குறைந்தது. அதன் மூலம் கடந்த 3 ஆண்டில் இந்தியா ₹1,49,989 கோடி சேமித்து இருக்கிறது. இது வருடத்திற்கு சராசரியாக ₹96,923 கோடி வசூலை குறைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு…

பிட்காயினை உருவாக்கிய சட்டோஷிக்கு இந்த நிலைமையா?
சட்டோஷியின் வாலெட்டுகள் உட்பட பல வாலேட்கள் முடக்கப்படலாம்? பிட்காயின் வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தீர்மானம் முன்வைக்கப்பட்டது! பிட்காயின் நெட்வொர்க்கை எதிர்கால குவாண்டம் கணினி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், பிட்காயின் டெவலப்பர்களால் ஒரு புதிய மற்றும் பரபரப்பான பரிந்துரை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். இதில், பழைய பிட்ட்காயின் வாலெட்டுகளை (அதில் சதோஷி நகமோட்டோவின் வாலெட்டுகளும் அடங்கும்) முடக்கும் யோசனைகள் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை பிட்காயின் டெவலப்பர் ஜேம்சன் லாப்ப் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, 2027ல்…

G7 நாடுகளை முந்தும் இந்தியா – புதிய ஆய்வு உறுதி!
சமீபத்திய ஆய்வொன்றின் படி, வளர்ச்சியின் வேகத்தைத் தொடர்ந்து இந்தியா எதிர்காலத்தில் G7 நாடுகளின் பொருளாதாரங்களை முந்தும் என கூறப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பலம் இந்தியாவின் முக்கிய ஆதாரங்களாகவும், இது உலகளவில் அதிபொருளாதார சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஃப் கணக்குகளில் இருந்து முன் பணம் பெறும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!
ஊதியதாரர்கள் நலவாரியம் (EPFO), பி.எஃப். கணக்குகளில் இருந்து அவசர தேவைகளுக்காக பெறக்கூடிய முன்கூட்டிய பணம் (advance withdrawal) வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.5 லட்சம் வரை அதிகரித்துள்ளது. மருத்துவம், வீட்டு கட்டிடம் மற்றும் கல்வி போன்ற அவசர தேவைகளுக்காக இந்த வசதி வழங்கப்படுகிறது. ஊதியதாரர்களுக்கு இது மிகுந்த நிவாரணமாகும்.

SDG பட்டியலில் இந்தியா முதல் முறையாக Top 100-இல் இடம் பிடித்தது!
தொடர்திறன் வளர்ச்சி இலக்குகள் (SDG Index) பட்டியலில், இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக Top 100 நாடுகளில் இடம் பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரம், பெண் அதிகாரம், பசுமை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.