
தொழில்நுட்பம்

BytePe: மாதாந்திர சந்தா மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு புதிய வழி
இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் புதுமை முயற்சியாக BytePe நிறுவனம், பயனாளர்களுக்கு பெரிய தொகை செலவில்லாமல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரு குறைந்த தொகையைச் செலுத்தி, iPhone 17 உள்ளிட்ட உயர்தர ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும். 12 மாதங்கள் கடந்த பிறகு, அவர்கள் தங்களது சாதனத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதே சந்தா திட்டத்தைத் தொடரலாம். இந்த சேவையின் சிறப்பம்சமாக, பயன்பாட்டின்போது ஏற்படும் சாதன சேதங்களுக்கு காப்பீடு வசதி…

பான் 2.0: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இலவச e-PAN!
நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் பான் கார்டு (PAN Card), தற்போது முழுமையான டிஜிட்டல் மாற்றத்திற்குள் நுழைகிறது. இந்திய அரசு அறிமுகப்படுத்திய பான் 2.0 திட்டம், பான் கார்டுகளை ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலேயே பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் — e-PAN இலவசம். அதேசமயம், புதுப்பிப்பு அல்லது மாற்றங்கள் தேவைப்பட்டால் குறைந்த கட்டணத்தில் அவற்றை செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பான் 2.0 விண்ணப்பிக்கும் படிகள்: 1. அரசு வழங்கிய e-PAN…

இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!
இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!
இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…

இந்தியாவில் UPI புரட்சி – பரிவர்த்தனைகள் புதிய உச்சம்!
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது…

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!
இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும். இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது. விண்ணப்பம் TRACES…

Toll – FASTag : வருடாந்திர பாஸ் அறிமுகம்!
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக FASTag வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வர்த்தகம் சாராத கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு ரூ.3,000 செலுத்தி ஒரு ஆண்டுக்குள் அதிகபட்சம் 200 முறை பயணிக்கலாம். இந்த வசதியால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. FASTag கணக்கில் வருடாந்திர பாஸ் மற்றும் வழக்கமான இருப்பு…

டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!
இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL இணைப்பு மூலம்…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் | Green Railway Revolution in India
இந்திய ரயில்வே, பசுமைப் பயண நோக்கில் முதன்முறையாக ஹைட்ரஜன் இயந்திர ரயிலை உருவாக்கியுள்ளது. சென்னையின் இன்டிக்ரல் கோச் ஃபேக்டரியில் (ICF Chennai) இறுதி சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், இந்த ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் பாதையில் இயக்கப்பட உள்ளது. ₹136 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்வே முயற்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயில் 1,200 ஹார்ஸ்பவர் சக்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் சுமார் 356 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியது. ஒரே…

ப்ரோகிராமர் வேலைக்கு இனி நேரடி இன்டெர்வியூ முக்கியம் – கூகுள் அறிவிப்பு | Google Programmer Jobs Hiring Update 2025
கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியமர்த்தும் செயல்முறைகளில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் உண்டாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஆன்லைன் நேர்காணல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், உண்மையான திறமைகளை இந்த முறையில் சரியாகப் பரிசோதிக்க இயலாமல் இருக்கிறது. குறிப்பாக பொறியியல் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கான நேர்காணல்களில், AI மூலம் உதவி பெறுதல் வழக்கமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக, திரு. சுந்தர் பிச்சை அவர்கள்…

Google Chrome-ஐ வாங்க 34.5 பில்லியன் டாலர் சலுகை வைத்த Perplexity AI!
அமெரிக்காவில் இயங்கும் Perplexity AI என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப், Google Chrome – ஐ வாங்குவதற்காக 34.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்த சலுகை அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் Google-க்கு எதிராக நடைபெற்று வரும் அன்ட்டி-டிரஸ்ட் வழக்கு முடிவில், Chrome-ஐ பிரித்து விற்க வேண்டிய நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த சலுகை வந்துள்ளது. Perplexity தனது சலுகையில்…

AI வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!
தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

டெஸ்லா – ஆட்டோபைலட் விபத்து வழக்கில் ரூ.2,750 கோடி இழப்பீடு!
டெஸ்லா கார் ஆட்டோபைலட் முறைமையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பம் தாக்கல் செய்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் 329 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,750 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது டெஸ்லா மீது எதிர்பார்க்கப்படும் பல்வேறு வழக்குகளுக்கான கதவுகளை திறக்கக்கூடிய முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 2022-ல் நடந்த பயங்கர சாலை விபத்துடன் தொடர்புடையது. டெஸ்லாவின் Model 3 கார் தானாகவே ஓடிக்கொண்டு தடுப்பு சுவரில் மோதி பயணித்தவர் உயிரிழந்தார். அந்த…

பிட்காயினை உருவாக்கிய சட்டோஷிக்கு இந்த நிலைமையா?
சட்டோஷியின் வாலெட்டுகள் உட்பட பல வாலேட்கள் முடக்கப்படலாம்? பிட்காயின் வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தீர்மானம் முன்வைக்கப்பட்டது! பிட்காயின் நெட்வொர்க்கை எதிர்கால குவாண்டம் கணினி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், பிட்காயின் டெவலப்பர்களால் ஒரு புதிய மற்றும் பரபரப்பான பரிந்துரை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். இதில், பழைய பிட்ட்காயின் வாலெட்டுகளை (அதில் சதோஷி நகமோட்டோவின் வாலெட்டுகளும் அடங்கும்) முடக்கும் யோசனைகள் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை பிட்காயின் டெவலப்பர் ஜேம்சன் லாப்ப் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, 2027ல்…


CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!
இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் . வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை . CoinDCX இன்…

மனிதர்களால் ப்ரோக்ராம் கோட்கள் செய்யும் காலம் முடிவுக்கு வருகிறது! – மசாயோஷி சோன்
“மனிதர் இல்லாத ப்ரோக்ராம் கோடிங் ஆரம்பமாகிவிட்டது!” சாப்ட் பாங்க் நிறுவனர் மசாயோஷி சோன் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை தந்த SoftBank நிறுவனம், இப்போது தொழிலாளர்களில்லாத தொழில்நுட்ப உலகை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தலைவரான மசாயோஷி சோன் சமீபத்தில் நடந்த வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கூறியதாவது: “மனித ப்ரோக்ராம் கோடர்கள் காலம் முடிவுக்கு வரக்கூடிய நிலையில் உள்ளது. இனி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது செயற்கை நுண்ணறிவாகும்!” ஒரு ஊழியருக்கே 1,000…

தேனீயின் மேல் சிப்கள்: சீனாவின் நவீன தொழில்நுட்பம்!
பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம் (Beijing Institute of Technology) உலகின் மிக இலேசான நரம்பியல் சிப்பை (Brain Chip) உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் — இது ஒரு தேனீ பொதுவாக எடுத்துச் செல்லும் நெக்டர் பாரத்தைவிடவும் குறைவு. இந்தச் சிப்பின் மூலம் நேரடி மின்சார உந்துதல்களைக் கொண்டு தேனீயின் செயலை நேரடியாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மூன்று நுண்ணிய ஊசிகளின் மூலம் தேனீ மூளையில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அது பறக்கும் திசையை 90% துல்லியத்துடன்…

தண்டவாளங்களில் சூரிய ஆற்றல் உற்பத்தி: சுவிட்சர்லாந்தின் பசுமை பயணம்!
சுவிட்சர்லாந்து, இயற்கையை பாதிக்காமல் வளர்ச்சி பெறும் புதிய பாதையில் எடுத்து வைத்துள்ள ஒரு புதிய முயற்சி, உலகளவில் கவனம் ஈர்க்கிறது. அந்த நாட்டின் Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், ரயில்கள் ஓடும் தண்டவாளங்களைவே சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கியமான அம்சம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக பொருத்தக்கூடிய சோலார் பேனல்கள். இவை ரயில்கள் ஓடுவதில் எந்தவித தடையையும் ஏற்படுத்தாமல் செயல்படுகின்றன. ரயில்களின்…


இனி கொசுக்கள் நம்மை உளவு பார்க்கலாம் – சீன தொழில்நுட்பம்!
சீனா: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள மைக்ரோ ட்ரோன் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 1.3 செ.மீ. நீளமும் 0.3 கிராம் எடையும் கொண்ட இந்த சாதனம் ஒரு கொசுவைப் போல பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான பறக்கும் திறன், ஒலி இல்லாத இயக்கம் மற்றும் நுண்ணறிவு கேமரா, ஒலி பதிவு போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் ராணுவ உளவுப் பணிக்காக உருவாக்கப்பட்டாலும், வணிக உலகத்தில்…

ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த, புதிய தொழில்நுட்பம்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard

FasTag – வெளியான அசத்தல் அறிவிப்பு!
ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர FasTag பாஸ் சேவை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு