CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!

இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் .

வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை .


CoinDCX இன் நடவடிக்கைகள்:

1. நிறுவனத்தின் டிரெஷரி ரிசர்வ் மூலம் இழப்பை முழுமையாக மாற்றுவதற்கு நிறுவனம் வாக்களித்துள்ளது.


2. ஹேக் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட கணக்கு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது.


3. நிறுவனம் தற்போது பலதரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


4. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் தொழில்நுட்ப பாதுகாப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


5. வணிகம், இந்தியன் ரூபாய் (INR) பரிமாற்றமும் பாதிக்கப்படாமல் செயல்பட்டு வருகிறது.


6. “கிரிப்டோ சொத்துக்களை பதட்டமடைந்து விற்றுவிட வேண்டாம் (panic selling), சந்தை சமநிலைச் செல்லும்வரை பொறுமையாக இருங்கள்” என்று CoinDCX C.E.O கூறியுள்ளார்.