மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக FASTag வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வர்த்தகம் சாராத கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு ரூ.3,000 செலுத்தி ஒரு ஆண்டுக்குள் அதிகபட்சம் 200 முறை பயணிக்கலாம்.
இந்த வசதியால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. FASTag கணக்கில் வருடாந்திர பாஸ் மற்றும் வழக்கமான இருப்பு என இரண்டு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.
எனினும், 200 பயண வரம்பை கடந்தால் புதிய பாஸ் எடுக்க வேண்டும்; மேலும் பயன்படுத்தப்படாத பயணங்கள் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்படமாட்டாது. சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தினால் இது அடிக்கடி பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
Toll – FASTag : வருடாந்திர பாஸ் அறிமுகம்!
