தங்கம் வெளியிடும் பாக்டீரியா! இயற்கையின் அதிசயம்

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்த அதிசய நுண்ணுயிர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர்,

விஷத்தன்மையுள்ள உலோகங்களை உணவாக உட்கொண்டு இந்த நுண்ணுயிர் பாக்டீரியா தூய 24 காரட் தங்கத்தை கழிவாக வெளியிடுகிறது.

இந்த வகை பாக்டீரியாவிற்கு Cupriavidus Metallidurans  என்று பெயர். இவை சுரங்கங்கள் போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கொல்லும் கொடிய விஷமான தங்க சேர்மங்களை, இந்த நுண்ணுயிர் உண்டு, அதை தூய தங்கமாக மாற்றி வெளியிடுகிறது.

இந்த உயிரியல் அற்புதத்தைக் குறித்து ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இப்போது தொழில்துறைக்கு பயன்படக் கூடிய அளவுக்கு இது வளரவில்லை என்றாலும், biomining (நுண்ணுயிர் மூலம் உலோக அகழ்வு) துறையில் இது ஒரு புதிய பரிசோதனைப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இயற்கையின் ஆழத்தில் மறைந்துள்ள மனிதர்களுக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சக்திகளை இந்த ஆய்வு மீண்டும் நிரூபிக்கிறது.