கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று வேலை இழப்புகள் பெரிதாக ஏற்படும் என்ற அச்சத்தை இது உறுதி செய்துள்ளது. 

இதில், ஏற்கனவே “AI ரேட்டிங்” போன்ற வேலைகள் எதிர்காலத்தில் முழுமையாக இயந்திரப்படுத்தப்படக்கூடும் என்று பல தொழில்நுட்ப ஊழியர்கள் எண்ணுகின்றனர். மனிதர்கள் AI-யுடன் இணைந்து வேலை செய்ய தேவையான திறன்களை கற்றுக்கொள்ளவும், AI கருவிகளை பயன்படுத்தவும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் சட்ட விதிகள், வேலையின் தரம், அடிப்படை சம்பளம், வேலை நிபந்தனைகள் போன்றவை, தொழிலாளர் உரிமைகள் அடிப்படையில் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற வேலை இழப்புகளை தவிர்க்க, இந்திய IT மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை முன்னோக்கி கணிக்க வேண்டும்; AI-மாற்ற திறன்கள் (AI disruption) பற்றி திட்டமிடல் அவசியம். தொழில் பயிற்சி மையங்கள் (upskilling) மற்றும் திறன் மேம்பாடு (reskilling) திட்டங்களைத் அரசு முன்னெடுத்து  ஊழியர்களுக்கு AI-கருவிகள் பயிற்சி அளித்து மாற்றங்களை சமூக அடிப்படையில்  ஏற்றுக்கொள்ளும் வகையில் திட்டமிட வேண்டும்.