ஓசூர் விமான நிலையம் – உறுதி செய்யப்பட்ட இடம்!


பெங்களூரு அருகில் வேகமாக உயர்ந்து வரும் தொழில் முகாமாகிய ஓசூருக்கு, “விமானம் நிலையம்” அமைக்கும் எதிர்பார்ப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, ஓசூர் விமான நிலையத்திற்கான இடமாக பேரிகை–பாகலூர் அருகிலுள்ள பகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முன் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட OLS (Obstacle Limitation Surfaces) ஆய்வின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இடம், ஓசூரில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும், பாகலூரில் இருந்து 12 கிமீ தூரத்திலும், கர்நாடக–தமிழ்நாடு எல்லை அத்திப்பள்ளி பகுதியிலிருந்து ஏறத்தாழ 19 கிமீ தூரத்தில் உள்ளது. பெங்களூரு சாட்டிலைட் ரிங் ரோடுக்கு அண்மையில் இருப்பது லாஜிஸ்டிக்ஸ் அடுக்குமாடிக்கு ப்ளஸ் ஆகும்.

ஓலா, டாடா, டிவிஎஸ் உட்பட 500-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 3,000-க்கு மேற்பட்ட சிறு–நடுத்தர நிறுவனங்கள் உள்ள ஓசூரின் ஏற்றுமதி திறனை இந்த ஏர்போர்ட் பல மடங்கு தூண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.

அடுத்த படிகளில் மாநில அரசு முடிவுக்கு இணையாக மத்திய அனுமதிகள், விமான நிலைய ஆணையம் ஒப்புதல் போன்றவை தேவை. முக்கியமாக, 2033 வரை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இருந்து 150 கிமீ வட்டாரத்தில் புதிய ஏர்போர்ட் அமைக்கக் கூடாது என்ற ஒப்பந்த விதி இருப்பதால், BIAL மூலம் எதிர்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக “ஓசூர் ஏர்போர்ட் எப்போது?” என்ற கேள்விக்கு இப்போது “இடம் தயார்” என்ற உறுதியான செய்தி  வந்துள்ளது. அனுமதிகள்—டெண்டர்கள்—செயல்முறை ஆகியவை தகுந்த வேகத்தில் நடந்தால், தொழில் முதலீடுகள், கார்கோ இயக்கம் ஆகிய அனைத்தும் ஓசூர் பகுதிக்கு புதிய கதவுகளை திறக்கும்.