₹5000 கோடியில் இந்தியாவின் கனிமங்களுக்கான திட்டம்


சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இந்திய அரசு ரேர் எர்த் மற்றும் மேக்னெட்டுகளுக்கான புதிய PLI (Production Linked Incentive) திட்டத்தை தயாரித்து வருகிறது. இது ₹3,500 முதல் ₹5,000 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் மதிப்பு: ₹3,500 – ₹5,000 கோடி.
இது “Reverse auction” முறை மூலம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கு அடுத்த 2 வாரங்களில் அமைச்சக அளவில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு.

2025க்குள் ரேர் எர்த் மேக்னெட்டுகளுக்கான உள்நாட்டு தேவை 4,010 மெட்ரிக் டன் என மதிப்பீடு. மேலும் 2030க்குள் இது 8,220 மெட்ரிக் டன் ஆக இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மின் வாகனங்கள் (EVs), காற்றாலை உற்பத்தி, மற்றும் பாதுகாப்பு துறைகள் ஆகியவை இவற்றில் முக்கிய பயன்பாட்டு துறைகளாகும். இத்திட்டத்தின் மூலம் இவற்றின் உள்நாட்டு உற்பத்தி வலுப்படுத்தப்படும்.

இதனால் Mines and Minerals (Development and Regulation) Act சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மத்திய அரசின் IREL (India Rare Earths Limited) நிறுவனங்கள் ஆலுவா மற்றும் ஓ.எஸ்.சி.ஓ.எம் (OSCOM) உற்பத்தி மையங்களில் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,000 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது.