உலகின் நம்பிக்கையாக மாறும் இந்திய பொருளாதாரம்!


பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நிகழ்த்திய உரையில், இந்தியா சிறிய மாற்றங்களை (Incremental Changes) மட்டும் அல்லாமல், பெரிய மாற்றங்கள் (Quantum Jump) அளவிலான சீர்திருத்தங்களையே முன்னெடுத்து வருவதாகக் கூறினார். அவர் வலியுறுத்திய “Reform, Perform, Transform” தத்துவம், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அரசின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் GST 2.0, வருமான வரி சட்ட திருத்தங்கள், Jan Vishwas 2.0 போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள், பொருளாதாரத்திற்கு புதிய வேகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மெக்ரோ –  மார்க்கோ பொருளாதார நிலைத்தன்மை காரணமாக, இந்தியா உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. விரைவில் உலகளவில் 20% பங்கு பெறும் திறனை இந்தியா கொண்டிருப்பதோடு, மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகும் பாதையில் உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.

ஸ்டார்ட்அப் மற்றும் விண்வெளி முன்னேற்றம்:

விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்தது, இந்தியாவின் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கூறப்படுகிறது. 2014-இல் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் இருந்த நிலையில், இன்று 300 க்கும் மேற்பட்ட space startups உருவாகியுள்ளன. மேலும், Gaganyaan திட்டம் மூலம் இந்தியா விண்வெளிக்கு மனிதரை அனுப்பத் தயாராகி வருகிறது.

துறைகள் முழுவதும் சீர்திருத்தம்:

விளையாட்டு, நீதி, போக்குவரத்து, கடல் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, “Ease of Doing Business” சூழலை வலுப்படுத்துகின்றன.

உலக பார்வை:

Times Internet தலைவர் Satyan Gajwani, இந்தியாவின் Self-Reliance (ஆதாரபூர்வ வளர்ச்சி) திட்டத்தைப் பாராட்டி, உலகளாவிய அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான மிகப்பெரிய வலிமையாக இதை குறிப்பிட்டார். இன்று இந்திய பொருளாதாரம் உலக நாடுகளின் நம்பிக்கைச் சின்னம் ஆக மாறி, அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என கூறுகின்றனர்.