JSW – மின்சார வாகன பேட்டரி துறையில் – சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!


இந்தியாவில் மின்சார வாகனத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், JSW குழுமம் சீன, ஜப்பான் மற்றும் தென் கொரியா தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, சீனாவின் முன்னணி நான்கு நிறுவனங்களுடன் பேட்டரி தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஆழமான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

உற்பத்தி திட்டம்:

முதற்கட்டமாக 2027க்குள் 10 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.


அடுத்த கட்டத்தில் 2028 முதல் 2030க்குள் 20 ஜிகாவாட் திறன் சேர்க்கப்படும்.
இறுதிக்கட்டமாக, மொத்த உற்பத்தி திறன் 50 ஜிகாவாட்டாக உயரும்.

பேட்டரி செல்கள் மட்டுமின்றி, அவற்றுக்குத் தேவையான கேத்தோடு, அனோடு, பிரிப்பான், செபரேட்டர் போன்ற முக்கிய மூலப்பொருட்களையும் இந்தியாவில் சுயமாக உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது, இறக்குமதி சார்ந்த நிலையை குறைத்து உள்நாட்டு தொழில் வலிமையை அதிகரிக்கும்.

இந்தப் பெரிய திட்டம் JSW கிரீன் மோபிலிட்டி மற்றும் JSW பெஸ் ஆகிய துணை நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியாவில் பசுமை ஆற்றல் மற்றும் மின்சார வாகன வளர்ச்சி வேகமடையும்.