இந்திய நாடாளுமன்றம் “Promotion & Regulation of Online Gaming Bill, 2025”-ஐ நிறைவேற்றி, பண அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்துள்ளது.
• இனி ரியல்-மணி கேமிங் ஆப்ஸ் (Dream11, MPL போன்றவை) – விளம்பரம், ஒப்புதல், பண பரிமாற்றம் – அனைத்தும் சட்ட விரோதமாகக் கருத்தப்படும்.
• மீறினால் 3 ஆண்டு சிறை அல்லது ₹1 கோடி அபராதம்; மீண்டும் மீறினால் ₹2 கோடி வரை அபராதம் + 5 ஆண்டு சிறை விதிக்கப்படும்.
• e-Sports, கல்வி விளையாட்டுகள், சமூக விளையாட்டுகள் – அரசின் ஆதரவு பெறும்.
• Online Gaming Authority உருவாக்கப்பட்டு, ஒழுங்குமுறை விதிகள், உரிமம் மற்றும் பயனாளர் பாதுகாப்பை மேற்பார்வை செய்யும்.
இதன் காரணமாக குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. Nazara Tech பங்கு 21% வீழ்ச்சி; Delta Corp 5% குறைந்துள்ளது.
“இளைஞர்களை தவறான பந்தயங்களில் இருந்து காப்பாற்றி, பாதுகாப்பான கேமிங் சூழலை உருவாக்கும் முக்கிய முயற்சி இது.” என்று அரசு மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.