செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய்ராஜியின் பயணம்:
புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.
2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக் நிறுவத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் தொழில்நுட்ப தயாரிப்பு, சோதனை மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்பில் சிறந்து விளங்கியது.
OpenAI திட்டம்:
விஜய்ராஜி தற்போது ஓபன்ஏஐயின் ChatGPT போன்ற பயன்பாடுகளின் மேம்பாட்டை முன்னெடுப்பார்.
OpenAI பயன்பாட்டு தயாரிப்புகள் பாதுகாப்பாகவும், தரமாகவும், பயனாளர்களுக்கு ஏற்றவாறும் உருவாக வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். ஸ்டாட்சிக் குழுவினர் Open AI உடன் இணைந்து பணிபுரிவார்கள், ஆனால் சீயாட்டிலில் தனி அலுவலகமாகத் தொடர்வார்கள்.
அரிய தகவல்கள்
- ஃபேஸ்புக் நிறுவனத்தில் பெரிய அணிகளை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்.
- ஸ்டாட்சிக் நிறுவனம் தற்போது தினசரி 1 டிரில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்ப சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது.
- தொழில்நுட்ப வளர்ச்சியோடு, இளைஞர்களுக்கு கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் ஊக்கமளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
- விஜய்ராஜி 9 முக்கிய காப்புரிமைகளை தனதாக்கியுள்ளார்.