மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்:

முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து பணிபுரிந்த பிறகு.

இரண்டாம் பகுதி: 12 மாதங்கள் பணி செய்து, நிதி விழிப்புணர்வு பயிற்சியை முடித்த பிறகு


நிறுவனங்களுக்கும் ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மாதம் ₹3,000 ஊக்கப்பணம் வழங்கப்படும். இது பொதுத்துறையில் இரண்டு ஆண்டுகள் வரை, உற்பத்தித் துறையில் நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

இத்திட்டம் தொடங்கியதிலிருந்து உத்தரபிரதேசத்தில் மட்டும் ஜூலை மாதத்திற்குள் 94,000-க்கும் மேற்பட்டோர் EPF UAN பெற்றுள்ளனர். மேலும் 2,152 புதிய நிறுவனங்கள் EPFO-வில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக formal sector வேலைவாய்ப்பு 6% முதல் 8% வரை உயர்ந்துள்ளது என்பது முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.