வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரி சேமிப்பு – ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான முழு வழிகாட்டு குறிப்புகள்!


ரியல் எஸ்டேட் முதலீடு வீடு வாங்குவதற்கோ அல்லது வாடகை வருவாய் பெறுவதற்கோ மட்டுமல்ல; சரியான திட்டமிடலுடன் வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளையும் அளிக்கக்கூடியது. ஆனால், பல முதலீட்டாளர்கள் சட்டப்படி கிடைக்கக்கூடிய இந்நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் விடுவதால் பெரிய சேமிப்புகளை இழக்கிறார்கள்.

கட்டுமானத்திற்கு முன் வட்டி

சொத்து கட்டுமானம் முடிந்து, உரிமை பெற்ற பின், முன் கட்டுமான காலத்தில் செலுத்திய வட்டியை ஐந்து ஆண்டுகளுக்கு சமமாகப் பிரித்து தள்ளுபடி கோரலாம். இது பிரிவு 24(b) கீழ் செல்லுபடியாகும்.

முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம்

சொத்து வாங்கும்போது செலுத்தும் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை பிரிவு 80சி கீழ் தள்ளுபடியாகக் கோரலாம். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை நன்மை பெறலாம். மலிவு விலையிலான வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் வட்டி தள்ளுபடி கிடைக்கும். இது புதிய வீடு வாங்குவோருக்கு மிகப் பயனுள்ளதாகும்.

வாடகை வருமானத்தில் நிலையான தள்ளுபடி:

சொத்தை வாடகைக்கு விடுபவர்கள், வாடகை வருமானத்திலிருந்து 30 சதவீதம் வரை “ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்” பெற முடியும். இது வருடாந்திர வரிச் சுமையை குறைக்கும்.

கூட்டு உரிமை:

சொத்தை இரண்டு பேர் அல்லது அதற்கு மேல் இணைந்து வாங்கினால், ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிவு 24(b) மற்றும் பிரிவு 80சி கீழ் வரிச் சலுகை பெறலாம். இதனால் மொத்த வரிச் சலுகை இரட்டிப்பாக வாய்ப்பு உண்டு.                                                                                                                

தவறவிடப்படும் பொதுவான பிழைகள்

– செலவுகளுக்கான ஆவணங்களை பாதுகாக்காமல் விடுதல்.
– தகுதியான கழிவுகளை சரியான நேரத்தில் கோராமல் விடுதல்.
– கட்டுமான வட்டியை சரியான பிரிவுகளில் பதிவு செய்யாதது.

முதலீட்டாளர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்!

1. அனைத்து ரசிதுகள், பில்கள், ஒப்பந்த ஆவணங்களைச் சேமித்து வைக்க வேண்டும்.


2. பிரிவு 24(b), 80சி, 80இஇஏ போன்ற சட்டப்பிரிவுகளை நன்றாக அறிந்து செயல்பட வேண்டும்.


3. வரிச் சலுகைகளின் கால வரம்புகளை பின்பற்ற வேண்டும்.


4. சொத்து முதலீடு செய்யும் முன் நிபுணர் ஆலோசனையை பெற வேண்டும்.


5. சரியான திட்டமிடலால் வரி சேமிப்பு மற்றும் சொத்து மதிப்பு உயர்வு இரண்டும் கிடைக்கும்.