செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                    

ஏன் இத்தகைய முடிவு?

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள் குறைந்துவிட்டன. கடந்த 26 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர் தேவைகள், AI மூலம் உடனடியாக மீண்டும் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.”

மேலும் கூறுகையில், “இப்போதைய நீக்கத்தால் வாடிக்கையாளர் சேவை துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், முழுமையான தானியக்கம் அல்ல, மனித மேற்பார்வையும் அவசியம்” என்று மார்க் பெனியோஃப் தெரிவித்துள்ளார்.