உலகளாவிய தேவை & அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிரொலி – வெள்ளி விலை உயர்வு!


இந்திய MCX-இல் வெள்ளி விலை சாதனை உயரத்தை எட்டியது. கிலோ ஒன்றுக்கு ₹1,26,730 வரை சென்றது. இதுவரை இல்லாத உச்சம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பது குறித்த எதிர்பார்ப்பு விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.


சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV), எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் துறைகள் வெள்ளி தேவையை வேகமாக அதிகரிக்கின்றன. குறைந்த டாலர் மதிப்பு மற்றும் வெள்ளி பற்றாக்குறை சந்தையில் விலையை மேலும் தூண்டுகின்றன.

வெள்ளியின் விலை ஏற்றம்!

2025 தொடக்கம் முதல் இன்று வரை வெள்ளி விலை 45% உயர்ந்துள்ளது. இதே காலத்தில் தங்கம் 42% மட்டுமே உயர்ந்துள்ளது. பங்கு சந்தை (Sensex) வெறும் 3.6% மட்டுமே வளர்ந்துள்ளது.

அமெரிக்க வட்டி மற்றும் டாலர் மதிப்பு!


அமெரிக்க மத்திய வங்கி (Fed) 25 அடிப்படை புள்ளிகள்  (basis points) மூலம் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. வட்டி இல்லாத சொத்துக்கள் (non-yielding assets) ஆன தங்கம் மற்றும் வெள்ளிக்கு இது பெரிய பலனாகும்.

டாலர் மதிப்பு வீழ்ச்சி:


அமெரிக்க டாலர் குறியீடு (US Dollar Index) 97.323 என்ற நிலைக்கு சரிந்துள்ளது. இது 2 மாதங்களில் மிகக் குறைந்த அளவு. டாலர் பலவீனமாவது உலகளவில் வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதற்கு சாதகமாகிறது.

தேவையும், பற்றாக்குறையும்:


சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் வெள்ளி தேவை மிக வேகமாக அதிகரிக்கிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக, உலகளாவிய தேவைக்கு இணையான வழங்கல் இல்லை. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

ETF முதலீடுகள்:


2025 முதல் பாதியிலேயே வெள்ளி சார்ந்த ETF-களில் 95 மில்லியன் அவுன்ஸ் முதலீடு வந்துள்ளது. இது 2024 முழு ஆண்டின் முதலீட்டை மீறிவிட்டது.
தற்போது உலகளாவிய ETF-களில் மொத்தம் 1.13 பில்லியன் அவுன்ஸ் வெள்ளி உள்ளது. இதன் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்-ஐ தாண்டியுள்ளது.

நிபுணர்கள் கணிப்பு:


MCX-இல் வெள்ளி விலை ₹1,30,000 – ₹1,33,000 வரை விரைவில் சென்று, ஆண்டு முடிவில் ₹1,40,000-ஐ அடையும். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை $40–42 அவுன்ஸ் இடையே நிலைக்கும்.
எதிர்கால நோக்கம்
குறுகிய கால அதிர்வுகள் இருந்தாலும், தொழில் தேவை + வழங்கல் குறைவு காரணமாக, வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.