வெள்ளி விலை ரூ.2000 உயர்வு!

சென்னை : சந்தையில் வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து தற்போது ₹1,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ₹125 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலை உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தை நிலவரம், மத்திய வங்கி முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒரே நாளில் ரூ.2000 வரை உயர்வது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


“பொதுவாக பங்கு சந்தை சரிவிலும், பொருளாதார சிக்கல்களிலும் மக்கள் பத்திரமான முதலீடாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள உலோகங்களைத் தேடுகிறார்கள். இதுவே வெள்ளி விலையை உயர்த்துகிறது.” என்று முதலீட்டு ஆலோசகர் திரு. எம் எம் பிரபு தெரிவுத்துள்ளார்.

வெள்ளி வாங்க திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் நகை வணிகர்கள், இந்த விலை நிலவரங்களை கவனத்தில் கொண்டு முதலீடுகளுக்கான நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்துகின்றார்.