உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உணவுக் கழிவு பிரச்சினைக்கு, தென் கொரியா ஒரு புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளது. அங்குள்ள கம்யூனிட்டி கம்போஸ்டிங் இயந்திரங்கள், வீடுகளிலிருந்து வரும் உணவுக் கழிவுகளை ஒரே இரவில் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுகின்றன.
இந்த முறையின் மூலம்,
• குப்பைக் கிடங்குகளில் சேரும் கழிவு குறைகிறது
• விவசாயம் மற்றும் தோட்டப்புற வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது
• மண்ணின் வளம் அதிகரிக்கிறது
• பசுமை வாழ்க்கை முறைக்கு மக்கள் நகர்கின்றனர்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றி, பூஜ்யக் கழிவு (Zero Waste) எதிர்காலம் நோக்கி நகரும் இந்த கண்டுபிடிப்பு, உலகின் நகரப் பகுதிகளுக்கு சிறந்த வணிக–சூழல் மாதிரியாக கருதப்படுகிறது.
தென் கொரியாவின் முயற்சி – கழிவைச் சுமையிலிருந்து வளமாக மாற்றும் புதிய வணிக வாய்ப்பு. இந்த முறை தொழில்நுட்பம் வளர்ச்சியை விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.