தேனீயின் மேல் சிப்கள்: சீனாவின் நவீன தொழில்நுட்பம்!

பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம் (Beijing Institute of Technology) உலகின் மிக இலேசான நரம்பியல் சிப்பை (Brain Chip) உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் — இது ஒரு தேனீ பொதுவாக எடுத்துச் செல்லும் நெக்டர் பாரத்தைவிடவும் குறைவு. இந்தச் சிப்பின் மூலம் நேரடி மின்சார உந்துதல்களைக் கொண்டு தேனீயின் செயலை நேரடியாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மூன்று நுண்ணிய ஊசிகளின் மூலம் தேனீ மூளையில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அது பறக்கும் திசையை 90% துல்லியத்துடன் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இது இயற்கையில் காணப்படும் ‘கார்டிசெப்ஸ்’ (Cordyceps) என்ற பராசிடிக் பூஞ்சையின் செயல்பாட்டை ஒத்த அமைப்பாக செயல்படுகிறது. இயற்கை முறையில் பூஞ்சை உயிரிகளின் செயலைக் கட்டுப்படுத்துவதை போல, இந்த சிப்பும் அதே வழியில் செயற்கையான கட்டுப்பாடு அளிக்கிறது. அதே நேரத்தில், இது மென்மையான, மிகப்பெளிதான சர்க்யூட்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. தேனீ உடலுடன் இயல்பாக இயக்கமடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொலைதூர ரகசிய உளவு நடவடிக்கைகள், இயற்கை பேரழிவுகளுக்கு பிறகான மீட்புத் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் போன்ற அத்தனை சவாலான சூழ்நிலைகளிலும் இந்த “சைபோர்க் தேனீக்கள்” (Cyborg Bees) பயனுள்ளதாக இருக்கலாம் எனப் பீஜிங் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் சாவோ ஜியெலியாங் தலைமையிலான குழு நம்பிக்கையுடன் கூறுகிறது.

முந்தைய முயற்சிகளில் பயன்படுத்திய சிப்கள் மிகவும் கனமாக இருந்ததால், அவை சாத்தியமான தீர்வை அளிக்கவில்லை. ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள எடை குறைந்த மாடல், நீண்ட நேரம் பறப்பதற்கும் தேனீக்கள் அதிகம் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கும் வழிவகுக்கிறது.

தற்போது இந்த தேனீக்கள் தொடர்ந்து திறம்பட செயல்பட வயரின் மூலம் மின்சாரம் பெற வேண்டும். மேலும், ஜீரண உறுப்புகள் போன்ற மற்ற பசெயல்பாடுகளுடன் நடத்தப்பட்ட முன் ஆய்வுகளில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றை துல்லியமாக செயல்படவைக்க மிக நுண்ணிய பேட்டரிகளின் தேவை. இருப்பினும், இந்த கண்டுபிடிப்பு நம் எதிர்கால தொழில்நுட்ப உலகை முற்றிலும் மாற்றக்கூடிய மிகப் பெரிய முன்னேற்றமாகும்.

நம்மைச் சுற்றியுள்ள உலகில் நுண்ணறிவோடு இணைந்த மெஷின்கள் நம்மோடு பயணம் செய்யும் நாட்கள் மிகவும் அருகில்தான்!