மீண்டும் களமிறங்கும் பிரம்மாண்டம்! டாடா சியாரா 2025: வெறும் ₹11.49 லட்சம் தொடக்க விலை – ஈஎம்ஐ எவ்வளவு தெரியுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா சியாரா (Tata Sierra) கார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை மிகவும் கவர்ச்சிகரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவரங்கள்அறிமுகத் தொடக்க விலை: ₹11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த விலை, இந்தியாவின் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி காரை வாங்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. வேரியண்டுகள்: புதிய சியாரா நான்கு முக்கிய வேரியண்டுகளில் கிடைக்கிறது….


