
தமிழ்நாடு அரசு: ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில்நுட்பத்தையும், ஸ்டார்ட்அப்-களையும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதி பெற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை டேட்டா செலவுக்கான நிதியுதவி வழங்கப்படும். திட்ட காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த திட்டத்துக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட க்ளவுட் சேவை வழங்குநர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்புகள் நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வகையில் அரசாங்கம்…