BytePe: மாதாந்திர சந்தா மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு புதிய வழி

இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் புதுமை முயற்சியாக BytePe நிறுவனம், பயனாளர்களுக்கு பெரிய தொகை செலவில்லாமல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரு குறைந்த தொகையைச் செலுத்தி, iPhone 17 உள்ளிட்ட உயர்தர ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும். 12 மாதங்கள் கடந்த பிறகு, அவர்கள் தங்களது சாதனத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதே சந்தா திட்டத்தைத் தொடரலாம். இந்த சேவையின் சிறப்பம்சமாக, பயன்பாட்டின்போது ஏற்படும் சாதன சேதங்களுக்கு காப்பீடு வசதி…

Read More

Indian Oil – புதிய மார்க்கெட்டிங் இயக்குநர் சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா!

இந்தியாவின் முன்னணி எரிபொருள் மற்றும் பெட்ரோலிய நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Ltd)-இல், சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா புதிய மார்க்கெட்டிங் இயக்குநராக (Director – Marketing)*பொறுப்பேற்றுள்ளார். அவர், நிறுவனத்தின் வணிக வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்கும் புதிய திசையை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் அனுபவத்தின் வலிமை: சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா, இந்தியன் ஆயிலில் மூன்று தசாப்தங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். அவர் தனது தொழில்வாழ்க்கையை LPG வணிகத் துறையில்…

Read More

“பெங்களூரில் Anthropic அலுவலகம் — இந்திய AI துறைக்கு புதிய மைல்கல்!”

செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய தாக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனமான Anthropic, தனது முதல் இந்திய அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ChatGPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Claude AIயின் பின்னணியில் இருக்கும் இதே நிறுவனம், இந்திய சந்தையில் தன் பாதையை விரிவாக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் Infosys, TCS, மற்றும் IIT போன்ற…

Read More

மார்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ்: இந்திய வங்கித் துறையில் புதிய முதலீடு

உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான மார்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ், இந்திய வங்கி மற்றும் வீட்டு கடன் துறைகளில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இந்திய வங்கித் துறை தற்போது வலுவான வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நிலையில், இந்த இரு பெரிய முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, RBL வங்கி மற்றும் Samman Capital (முந்தைய Indiabulls Housing Finance) ஆகிய நிறுவனங்களில் பங்குகளை வாங்கியுள்ளனர். மார்கன் ஸ்டான்லி நிறுவனம் RBL…

Read More

Distil: சிறப்பு இரசாயனத் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்!

Distil, இந்தியாவின் முன்னணி சிறப்பு இரசாயனத் தொழில்நுட்ப நிறுவனமாக, தனது Series A நிதி திரட்டலில் $7.7 மில்லியன் (சுமார் ₹64 கோடி) பெறுவதை அறிவித்துள்ளது. இந்த நிதி திரட்டல், சிங்கப்பூரைச் சேர்ந்த Jungle Ventures மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த CE-Ventures ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும், Rubamin, PI Industries நிறுவனத்தின் துணைத் தலைவர் Mayank Singhal, மற்றும் India Quotient போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றுள்ளனர். இந்த புதிய…

Read More

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ்: இந்தியாவில் 40,000 கோடி முதலீட்டுடன் ஆசியாவின் மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள்

ரிலையன்ஸ் கன்ச்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றாகும், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்காக, மத்திய உணவுப் பொருள் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் ₹40,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், RCPL இந்தியா முழுவதும் இணைக்கப்பட்ட உணவுப் பொருள் உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள கத்தோல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் குர்ணூல் ஆகிய இடங்களில் ₹1,500…

Read More

அதானிக்கு வெற்றி –  ஹிண்டன்பர்க்  குற்றச்சாட்டுகளை நிராகரித்தது செபி!

இந்திய தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழும நிறுவங்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக ஹிண்டன்பர்க் ரிசர்ச்ச் நிறுவனம் பங்கு மோசடி, செயற்கையான பங்குகள் விலையேற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்துவந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை பெரிதும் பாதித்தது. தற்போது, இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India)இந்த குற்றச்சட்டங்களைப் பற்றி விசாரணை நடத்தி, அதானி குழுமத்திற்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் “தவறானவை”…

Read More

கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More

ஓசூரை அறிவுசார் மையமாக்கும் திட்டம்: TIDCO செய்யும் முயற்சி!

தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான  திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது.  இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது. என்ன பயன்கள் கிடைக்கும்?…

Read More

இந்திய ஐடி துறைக்கு புதிய சவால் – HIRE ACT!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகமான HIRE Act (Hiring Incentives to Restore Employment) என்ற சட்ட மசோதா, வெளிநாட்டில் கணினி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் அவுட்சோர்சிங் செய்து வரும் நிறுவனங்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தக்கூடும் என இந்தியாவின் முன்னணி ஐடி துறை எச்சரிக்கை செய்துள்ளது. 25% அவுட்சோர்சிங் வரி: அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களில் பணியை ஒப்படைக்கும் போது, அந்தச் செலவில் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும். வரி சலுகைகளில் கட்டுப்பாடு:…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More

ஃப்ளிப்கார்ட் – புதிய தலைவராக பாலாஜி தியாகராஜன்!

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், தனது புதிய தலைமை தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு அதிகாரியாக (CTPO) பாலாஜி தியாகராஜனை நியமித்துள்ளது. பாலாஜி அவர்களின் அனுபவம்: கூகுள், மைக்ரோசாஃப்ட், ஊபர், யாஹூ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.ஒரு நிறுவனத்தை நிறுவி அதில் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுள்ளார்.தொழில் துறைக்கான தானியங்கி தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பான பங்களிப்புகளை செய்துள்ளார். 9 அமெரிக்க காப்புரிமைகள் (பேட்டன்கள்) பெற்றுள்ளார். ஃப்ளிப்கார்ட்டில் அவரது பங்கு: செயற்கை…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More

இந்தியாவிற்கு 25% வரி விதித்தது USA!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரி உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கொண்டு அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை இது. இந்த வரி ஸ்டீல், அலுமினியம் பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பிளாஸ்டிக் பாகங்கள், வேளாண்மை சார்ந்த சில பொருட்கள் மீதும் இந்த வரி அமலாகிறது. இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் அபாயத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல…

Read More