விஞ்ஞானி – தொழில் முனைவோர் : டாக்டர் பாத்திமா பெனசீர் & அசூகா லேப்ஸ்!

விஞ்ஞானியாய் கண்டுபிடித்த கோட்பாடு, பொதுமக்களின் வாழ்க்கையுடன் இணையும் போது அது வெறும் ஆராய்ச்சியல்ல, ஒரு புதிய தொழில் பயணத்தின் துவக்கம் ஆகிறது. அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர் தான் டாக்டர் பாத்திமா பெனசீர். மரபியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அவர், அந்த அறிவை வணிக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து அசூகா லேப்ஸ் (Azooka Labs) என்ற உயிர் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கினார். அசூகா லேப்ஸ் –…

Read More

தமிழ்நாடு அரசு:  ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில்நுட்பத்தையும், ஸ்டார்ட்அப்-களையும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதி பெற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை டேட்டா செலவுக்கான நிதியுதவி வழங்கப்படும். திட்ட காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த திட்டத்துக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட க்ளவுட் சேவை வழங்குநர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்புகள் நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வகையில் அரசாங்கம்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More