ஹெச்சிஎல் (HCL Tech) மூன்றாம் காலாண்டு முடிவுகள்: லாபத்தில் 11% சரிவு – டிவிடெண்ட் அறிவிப்பு!

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், 2025 டிசம்பர் காலாண்டு (Q3 FY26) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக டிசிஎஸ் நிறுவனம் லாபச் சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது ஹெச்சிஎல் நிறுவனமும் அதே பாதையில் பயணிப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் வளர்ச்சி மற்றும் லாப நிலவரம்ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,591 கோடியாக இருந்தது. தற்போது அது 11 சதவீதம் சரிந்து ரூ.4,076 கோடியாகக்…

Read More

புதிய தொழிலாளர் சட்டங்கள்: ஐடி நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு!

மத்திய அரசு கடந்த நவம்பர் 2025 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour Codes) இந்திய ஐடி ஜாம்பவான்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் டிசம்பர் 2025 காலாண்டில் சுமார் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் செலவினம் உண்டாகியுள்ளது. டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களின் நிதித் தாக்கம்புதிய சட்டங்களின்படி பணிக்கொடை (Gratuity) மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காகச் செய்ய வேண்டிய பங்களிப்பு கணிசமாக…

Read More

கோஃபோர்ஜின் மெகா டீல்: அமெரிக்காவின் ‘என்கோரா’ நிறுவனத்தை ரூ.17,032 கோடிக்குக் கைப்பற்றியது!

இந்திய ஐடி சேவைத் துறையில் சமீபகாலமாக அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் இரண்டு அமெரிக்க நிறுவனங்களை வாங்கியதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான கோஃபோர்ஜ் (Coforge), சிலிக்கான் வேலி-யைத் தலைமையிடமாகக் கொண்ட என்கோரா (Encora) நிறுவனத்தை 2.35 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,032 கோடி) மதிப்பில் கைப்பற்றியுள்ளது. இந்த மெகா ஒப்பந்தம் பணமாக வழங்கப்படாமல், முழுவதுமாகப் பங்கு மாற்று முறையில் (Share-Swap) நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக,…

Read More

இன்ஃபோசிஸ் போனஸ் அறிவிப்பு: 83% வரை போனஸ் வழங்கப்பட்டும் ஊழியர்கள் அதிருப்தி! ஏன்?

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் (Infosys), செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுக்கான (நிதி ஆண்டு 2025-26 ஜூலை முதல் செப்டம்பர் வரை ) போனஸ் தொகையை தனது ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போனஸ் விவரங்கள்: சராசரி போனஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக 75% போனஸ் வழங்கியுள்ளது.அதிகபட்ச போனஸ்: ஊழியர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, சிலருக்கு 83% வரையிலும் போனஸ் தொகை கிடைத்துள்ளது.போனஸ் விகிதம்: தகுதியுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் போனஸ் விகிதம் 70.5% முதல் 83%…

Read More

கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More

இந்திய ஐடி துறைக்கு புதிய சவால் – HIRE ACT!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகமான HIRE Act (Hiring Incentives to Restore Employment) என்ற சட்ட மசோதா, வெளிநாட்டில் கணினி, மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் அவுட்சோர்சிங் செய்து வரும் நிறுவனங்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தக்கூடும் என இந்தியாவின் முன்னணி ஐடி துறை எச்சரிக்கை செய்துள்ளது. 25% அவுட்சோர்சிங் வரி: அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஐடி நிறுவனங்களில் பணியை ஒப்படைக்கும் போது, அந்தச் செலவில் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படும். வரி சலுகைகளில் கட்டுப்பாடு:…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More