தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்!
இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பாண்டில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விலை குறைந்ததாலும், குஜராத் உப்பின் வருகையாலும் 12 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே தேங்கியுள்ளது. உப்பளப் பகுதிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.சராசரி…


