கோல் இந்தியா – ஐஐடி மெட்ராஸ் கைகோர்ப்பு – புதிய ஆய்வு மையம் உதயம்!
இந்தியாவின் முன்னணி நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL), நீடித்த எரிசக்திக்கு (Sustainable Energy) முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக, கோல் இந்தியா நிறுவனம், நாட்டின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (IIT Madras) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்: ‘சென்டர் ஃபார் சஸ்டெய்னபிள் எனர்ஜி’ (Centre for Sustainable Energy) என்ற நீடித்த எரிசக்தி மையத்தை நிறுவுவதாகும்….


