இந்திய இறக்குமதியில் கச்சா எண்ணெய் முதலிடம்: ரஷ்யாவிடம் இருந்து ₹25,500 கோடிக்கு மெகா கொள்முதல்!
இந்தியாவின் இறக்குமதிப் பட்டியலில் கச்சா எண்ணெய் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்குப் பிறகு சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்யக் கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது. ஐரோப்பிய சிந்தனை அமைப்பான எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய எண்ணெயில் இந்தியாவின் ஆதிக்கம் சாதனை கொள்முதல்: உக்ரைன் போருக்கு முன், இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா…


