சைபர் பாதுகாப்புக்கு மத்திய அரசின் அதிரடி உத்தரவு: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம்! டெலிட் செய்ய முடியாது!
இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிட்ட ஒரு பாதுகாப்புச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்குத் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு விவரங்கள்:செயலியின் பெயர்: மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi). இந்தியாவில் புதிதாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்…


