
இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!
இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…