
மஹிந்திராவின் ஆதரவால் பேசுபொருளான “அரட்டை”
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Zoho உருவாக்கிய “அரட்டை (Arattai)” செயலி தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளத்தில் “இன்று நான் ‘அரட்டை’ செயலியை பெருமையுடன் பதிவிறக்கம் செய்தேன்” என கூறியதும், இந்திய தொழில்நுட்ப உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்தது. இதற்கு பதிலளித்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “அந்தப் பதிவு வந்தபோது நாங்கள் தென்காசி அலுவலகத்தில் செயலி…