டிரம்பின் புதிய விசா திட்டம்: $15,000 கட்டணமா? யாரை பாதிக்கும்?


அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பல கடுமையான குடியுரிமை மற்றும் விசா விதிமுறைகளை எடுத்துவர ஆரம்பித்துள்ளார். அதில் மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது இந்த “$15,000 விசா பாண்ட் திட்டம்”.

விசா பாண்ட் திட்டம் என்பது, சில நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வரும்போது, அவர்களின் விசா காலம் முடிந்த பிறகும் திரும்பி செல்லாமல் அனுமதி இல்லாமல் தங்குவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், $15,000 வரை ஒரு பாண்ட் (பாதுகாப்புத் தொகை) செலுத்துவதாகும்.

இந்த திட்டத்தின் நோக்கம்:
விசா விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தான் இந்த பாதுகாப்புத் தொகை. பயணிகள் சட்டப்படி நாடு திரும்பினால், அந்த தொகை திருப்பி வழங்கப்படும். ஆனால் விதிமீறினால், அமெரிக்க அரசு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டம் முதன்மையாக குடியுரிமை விதிகளை மீறக்கூடிய நாடுகளின் பயணிகளை குறிவைக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இது பொதுவான சுற்றுலா பயணிகள் (B-1/B-2 visa holders) மற்றும் சில தொழில்நுட்ப/non-immigrant விசா விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

இந்த திட்டம் இப்போது பல்வேறு தரப்பில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்ய இந்த தொகை மிகப்பெரிய தடையாக மாறும். கடுமையான மற்றும் மற்ற நாடுகளை அவமதிக்கும் விதியாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா உறவுகளில் தாக்கம்?
இந்தியா, அமெரிக்காவுடன் பல முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள நாடு. பல லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். இந்த திட்டம் அவர்களுடைய குடும்ப சந்திப்புகளை, தொழில் வாய்ப்புகளை, கடுமையாக பாதிக்கக்கூடும்.

இந்த தீர்மானம், இந்திய அரசை அதிர வைத்திருக்கிறது. இது தொடர்பாக இருநாடுகளும் உரையாடி தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தமும் இப்போது உருவாகியுள்ளது.